சாரு நிவேதிதா – என் மதிப்பிற்குரிய எழுத்தாளர்களில் ஒருவர்.
(எதிர் கும்மி அடிப்பவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டாம்)
புத்தகக் கண்காட்சியின் இரண்டாம் நாள், புத்தாண்டு கொண்டாட்டங்களினால் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. அதனாலோ என்னவோ உயிர்மை பதிப்பக அரங்கில், சாருவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
என் கையிலிருந்த சாருவின் சமீபத்திய புத்தகங்களில் ‘அன்புடன்’ கையொப்பம் இட்டு கொடுத்தார்.
கேள்வி: 1
ஒரு writer-ன் responsibility என்னன்னு நீங்க நினைக்கிறீங்க?
என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே எழுத வேண்டும்.
போலித்தனம் இருக்கக் கூடாது. compromise ஆகக் கூடாது. அது தான் முக்கியம்.எதுக்காகவும் compromise பண்ணிக்கக் கூடாது.
முன்பு ஒருமுறை, மதுரையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியது திடீரென ஞாபகம் வந்து தொலைக்கவே,
கேள்வி: 2
இணையத்தில் எழுதுகிறவர்கள் எல்லாம் ஜல்லி அடிக்கிற கும்பல்னு சொல்லி இருக்கீங்க. அவர்களும் அப்பிடித்தானே, தான் நினைப்பதை மற்றவர்களுக்கு சொல்ல விரும்புகிறார்கள். (அதற்க்கான களமாய் வலைப்பூ இருக்கிறது.) சற்று கடுப்பாகி,
நிறைய படிக்கணும்; நிறைய கத்துக்கணும். அப்புறம் எழுதுங்க.
திடீரென தொலைபேசி அழைப்பு வரவே, சரி பார்க்கலாம் என்று நகர்ந்தார். நிறைய கேட்க நினைத்தாலும், வோட்கா வாங்கித்தர வசதி இல்லாததால் நான் எஸ்கேப். (அப்ஸொலூட் வோட்காவின் விலை 2000 ரூபாயாம்.!!)
இவர் மட்டுமல்ல, பலரும் இப்படி நினைக்கலாம்.
என் இனிய சக பதிவர்கள் சற்று சிந்திக்கவும்.
வலைப்பூக்கள்,
கும்மி அடிப்பதற்கும், குமுறல்களுக்கும், குதூகலிப்பதற்கும் வசதியாய் இருப்பது உண்மை தான். அதே நேரத்தில், கொஞ்சம் பொறுப்புடன் நம்மைப் பதிவு செய்வோம் உலகுக்கு.
சரி. அப்படி எழுத்தாளனின் பொறுப்பு தான் என்ன?
டாக்டர் ருத்ரனின் வலைப்பதிவிலிருந்து,
“பதிவு என்பது ஒரு ரகசிய டைரியல்ல, ஒரு சிறுபத்திரிகை போல.அதுவும் சொந்தமான சிறு பத்திரிகை.”
மேலும் உலவியபோது கிடைத்தது,
சமூகத்தை புதிய நல்வழிக்கு இட்டுச்செல்ல எழுத்தாற்றலைப் பயன்படுத்த வேண்டும். (நன்றி :http://www.tamilcanadian.com)
“எழுத்து ஆன்மாவின் வெளிப்பாடு” – என்பது என் (தாழ்மையான) கருத்து.
உங்கள் கருத்து என்ன?
pls read my blog and notice this blog if you like my idea that what i express for bloggers.-thanking you !
வலை பதிவு, உரக்க பேசுவது போல்
நம் வட்டத்தை தாண்டி பலர் படிக்கின்றனர்
உரத்த சிந்தனை நம்மை உயர்த்தி காட்டும்
உண்மைதான். நன்றி!
பிறர் படிக்க அனுமதிக்கும் எந்த பதிவுக்கும் பொறுப்பு பதிவர்தான். இயன்றவன் செய்கிறான். இயலாதவன் இயன்றவனைப் பற்றியும் இயலக்கூடியதைப் பற்றியும் பதிகிறான்.
எழுத்து ஆன்மாவின் வெளிப்பாடு என்பதில் எனக்கு சிறிது மாறுபட்ட கருத்து. லா.ச.ரா கூறியது போல ` நெருப்பு` என்று எழுதியதை படித்தால் வாய் வெந்து விட வேண்டும்.
ஆரம்பத்தில் வேகமாக இடுகைகளை எழுத ஆரம்பித்த நான்
இப்போது எழுத யோசிப்பதே / தயங்குவதே இதனால்தான்.
1. பதிவு நமது கருத்தை வலியுறுத்துவது மட்டுமல்ல, மற்றவர்களை மனதால் கூட வருத்தும் வன்சொற்களை தவிர்ப்பது நலம்.
2. உலகம் முழுவதும் செல்வதால், பதிவர்களுக்கு பொறுப்புணர்ச்சி கண்டிப்பாக தேவை.
3. எழுதப்படும் எழுத்தை மட்டுமே விமரிசிக்க, யாருக்கும் உரிமை உண்டு. எழுத்தாளர்களின் தனிப்பட்ட குடும்ப விஷயங்கள் கண்டிப்பாக தேவையில்லை.
மேலும் நாளை கூறுகிறேன்.
தயங்காமல் எழுதுங்கள். எழுத்து உங்களை மேன்மைப்படுத்தும்.
ஒரு சிறப்பான படைப்புக்காக, ஆயிரம் குப்பைகளை எழுதத்தான் வேண்டியிருக்கிறது நிஜத்தில்…
“எழுத்தாளர்களின் தனிப்பட்ட குடும்ப விஷயங்கள் கண்டிப்பாக தேவையில்லை.”
நிச்சயமாய் ஆமோதிக்கின்றேன். (கண்டிக்கத்தக்கதும்கூட).
கருத்துக்கு நன்றி திரு. வீரராகவன்.
“எழுத்து ஆன்மாவின் வெளிப்பாடு”
உரத்த சிந்தனை நம்மை உயர்த்தி காட்டும்
Yes siva is right,
everyone has different kind of approaches, these type of web sides are very useful to them. 5 to 10 years before lot of small publishers were went loss, now days its the situvation is changed, because every writers (one day writer, one month writer life long writers )and readers find their queries and needs in these web sides,
so every one has the rights to publish their thinkings
so go ahead,
lot of readers are waiting here (like me),
note:
(sorry i don’t have tamil soft ware)
thanking you
நன்றி நாதன்.
வலது புறம் உள்ள “தமிழில் எழுத” என்ற லிங்கை பயன்படுத்தவும்.
சாஃப்ட்வேர் இல்லாமல்/நிறுவாமல் தமிழில் எழுத கீழ்கண்ட சுட்டியை பயன்படுத்துங்கள்
http://www.tamilveli.com/v2.0/tamil-unicode-editor.php
சிவப்ரியன், முரண்பாட்டுன் மொத்த உருவம் அவர். உங்களுடைய இரண்டாவது கேள்விக்கு பதிலை அவர் தளத்தில் வெளியிட்டிருக்கும் அவருடைய பேட்டியில் படியுங்கள். //பஸ் இல்லாத ஊரில் பிறந்து வளர்ந்த ஒருவன் திடீரென விமானத்தில் பறந்தால் எப்படி இருக்கும்? அந்த உல்லாசத்தைத் தந்தது இணையத்துடனான என் ஆரம்பகாலம். அந்த வாழ்க்கையை இப்போது நினைத்தாலும் பரவசமாக இருக்கிறது. அதனால் தொடர்ந்து இணையத்துடன் தொடர்பில் இருக்கிறேன்//
முன்பு சொன்னதை தவறு என்று மாற்றும் போது ஒரு சிறிய அளவாவது வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதுதான் பண்பு.
The best example for the above topic
The relationship between Ananda Vikatan and Chief minister (Who ever)
Publish cartoon about MGR and the publisher jailed.
3 years back Mu.Ka writing article in vikatan weekly, the same period he was comdempted by vikatan.
The courage to publish and the comment accepting mentality required for writers.