Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

http://www.sivapriyan.com

தொடர்ந்து எழுத எனக்கு ஆதரவும், உற்சாகமும் அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்!
புதிதாய் வீடு மாறியிருக்கின்றேன்.

முகவரி : http://www.sivapriyan.com

தங்கள் வருகையையும், கருத்துக்களையும் இதில் பதிவு செய்க.
மீண்டும்,

நன்றி! நன்றி!! நன்றி!!!

Advertisements

சாரு நிவேதிதா – என் மதிப்பிற்குரிய எழுத்தாளர்களில் ஒருவர்.

(எதிர் கும்மி அடிப்பவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டாம்)

புத்தகக் கண்காட்சியின்  இரண்டாம் நாள், புத்தாண்டு கொண்டாட்டங்களினால் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. அதனாலோ என்னவோ உயிர்மை  பதிப்பக அரங்கில், சாருவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

என் கையிலிருந்த சாருவின் சமீபத்திய புத்தகங்களில் ‘அன்புடன்’ கையொப்பம் இட்டு கொடுத்தார்.

கேள்வி: 1

ஒரு writer-ன் responsibility என்னன்னு நீங்க நினைக்கிறீங்க?

என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே எழுத வேண்டும்.

போலித்தனம் இருக்கக் கூடாது. compromise ஆகக் கூடாது. அது தான் முக்கியம்.எதுக்காகவும் compromise பண்ணிக்கக் கூடாது.

முன்பு ஒருமுறை, மதுரையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியது திடீரென ஞாபகம் வந்து தொலைக்கவே,

கேள்வி: 2

இணையத்தில் எழுதுகிறவர்கள் எல்லாம் ஜல்லி அடிக்கிற கும்பல்னு சொல்லி இருக்கீங்க. அவர்களும் அப்பிடித்தானே, தான் நினைப்பதை மற்றவர்களுக்கு சொல்ல விரும்புகிறார்கள். (அதற்க்கான களமாய் வலைப்பூ இருக்கிறது.) சற்று கடுப்பாகி,

நிறைய படிக்கணும்; நிறைய கத்துக்கணும். அப்புறம் எழுதுங்க.

திடீரென தொலைபேசி அழைப்பு வரவே, சரி பார்க்கலாம் என்று நகர்ந்தார். நிறைய கேட்க நினைத்தாலும், வோட்கா வாங்கித்தர வசதி இல்லாததால் நான் எஸ்கேப். (அப்ஸொலூட் வோட்காவின் விலை 2000 ரூபாயாம்.!!)

இவர் மட்டுமல்ல, பலரும் இப்படி நினைக்கலாம்.

என் இனிய சக பதிவர்கள் சற்று சிந்திக்கவும்.

வலைப்பூக்கள்,

கும்மி அடிப்பதற்கும், குமுறல்களுக்கும், குதூகலிப்பதற்கும் வசதியாய் இருப்பது உண்மை தான். அதே நேரத்தில், கொஞ்சம் பொறுப்புடன் நம்மைப் பதிவு செய்வோம் உலகுக்கு.

சரி. அப்படி எழுத்தாளனின் பொறுப்பு தான் என்ன?

டாக்டர் ருத்ரனின் வலைப்பதிவிலிருந்து,

பதிவு என்பது ஒரு ரகசிய டைரியல்ல, ஒரு சிறுபத்திரிகை போல.அதுவும் சொந்தமான சிறு பத்திரிகை.”

மேலும் உலவியபோது கிடைத்தது,

சமூகத்தை புதிய நல்வழிக்கு இட்டுச்செல்ல எழுத்தாற்றலைப் பயன்படுத்த வேண்டும். (நன்றி :http://www.tamilcanadian.com)

“எழுத்து ஆன்மாவின் வெளிப்பாடு” – என்பது என் (தாழ்மையான) கருத்து.

உங்கள் கருத்து என்ன?

33 ஆவது வருட சென்னை புத்தகத் திருவிழா.

இடம்: செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் மேல்நிலைப்பள்ளி. (பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

நாட்கள்: டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை (30.12.2009 – 10.01.2010)

நேரம்: மதியம் 2 மணிமுதல் இரவு 8 மணி வரை.
           விடுமுறை தினங்களில் காலை 11 மணிமுதல் இரவு 8.30 வரை

இணையதளம்: www.bapasi.com

இவன் – அவள் – அது

ஆடைகளற்று என்றோ
அம்மணமாகிவிட்ட சமூகம் – உனக்கு
அழுக்கான ஆடைகளை பரிசளித்திருகிறது.

நீயும் முடிந்தவரை முக்காடு போட்டு
உன் முகத்தை காதலை மறைத்துக்கொண்டாய்.

உடல் மறைக்காத அந்த ஆடைகளால் – உனக்கு
புதிய அங்கீகாரம் கிடைப்பதாய்
அந்த கூட்டம் அபத்தமாய் ஆர்ப்பரிக்கிறது!

புத்தாடைகளோடு வந்த என் காதல்
அங்கே பைத்தியம் என்றே
பரிகாசிக்கப்பட்டது.

ஆதலினால் களையப்பட்டது
காதலின் கண்கள்!

நீ அழகாய் இருக்கிறாய் – என்றே
சொல்லி பழக்கப்பட்ட என் காதலின் உதடுகள்,
எனக்கு இந்த உடை பொருத்தமாக இருக்கிறதா
என்று நீ கேட்ட போது கூட,
ஆம் என்றே அனிச்சையாய் தலையாட்டியது.

உன்னால் ஒரு கன்னத்திலும்
மீண்டும் மறு கன்னத்திலும்
அறை வாங்கியே அஃறிணையானது அது – கடைசியில்
அழிந்ததாகவே அர்த்தமும் செய்யப்பட்டது

இப்போதும்,
எப்போதாவது சில முறை – அது
உயிர்த்தெழும் போது
சவுக்கடிகள் தரப்பட்டு
இருட்டறையில் அடைக்கப்படுகிறது
புத்தாடைகளோடு !!!


குறிப்பு : (இது ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).